Abstract:
முகாமைத்துவக் கற்கை நெறியினுள் உள்ளடங்குகின்ற இவ் ஆய்வானது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒப்பனைப் பொருட்கள் தொடர்பாக நுகர்வோரின் கொள்வனவு நடத்தைகள் தொடர்பாக ஆராய்கிறது. மாற்றங்களுக்கு அடிக்கடி உள்ளாகின்ற இக்கால கட்டத்தில் இவ் ஆய்வு பொருத்தமாகும் எனக் கருதுகிறேன்
அழகு சாதனப் பொருட்கள் மற்றும் ஒப்பனைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகின்ற இச் சூழலில் அவை நுகர்வோரிடத்தில் எவ்வாறான செல்வாக்கை கொண்டிருக்கின்றன. நுகர்வோர் எவ்வாறான நடத்தைகளைக் கொண்டிருக்கின்றனர் என்பது பற்றி இந் நூல் ஆய்வு செய்கிறது.
இவ் ஆய்வு அறிக்கையானது இலகுவாகவும் தெளிவாகவும் எடுத்துக் காட்டப்படும் வகையில் முதலாவது அத்தியாயத்தில் ஆய்வு தொடர்பான அறிமுகமும் அறிஞர்களின் கருத்துரைகளும் ஆய்வுப் பிரச்சினை, ஆய்வு வினாக்கள், ஆயிவின் நோக்கங்கள், ஆய்வின் எடுகோள்கள், ஆய்வின் விசாலம், ஆய்வின் வரையறைகள் என்பவற்றை உள்ளடக்கியுள்ளது. இரண்டாவது அததியாயத்தில் மாறிகள் தொடர்பான விரிவான விளக்கங்களும் நுகர்வோரின் கொள்வனவு நடத்தைகள் தொடர்பாகவும் ஆராயப்படுகிறது. மூன்றாவது அத்தியாயத்தில் எண்ணக்கருவாக்கச் சட்டம் மற்றும் மாறிகளின் செல்வாக்கு தொடர்பான விளக்கங்களும் நாள்காவது அத்தியாயத்தில் தகவல் சேகரிப்பு முறைமை, ஆய்வு செய்யப்பட்ட விதம், வினாக்கொத்து நிருவாகம் தொடர்பாகவும் ஐந்தாவது அத்தியாயத்தில் தனிப்பட்ட தகவல்கள், ஆய்வுத் தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டது. தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது. ஆறாவது அத்தியாயத்தில் இம் மாறிகள் தொடர்பாக நுகர்வோரின் கொள்வனவு நடத்தைகள் தொடர்பான கலந்துரையாடலும் ஏழாவது அத்தியாயத்தில் முடிவுகள், சிபாரிசுகளும் விளக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இறுதியாக உசாத்துணை நூல் வரிசை உள்ளடக்கிய குறிப்புகளும் தகவல் சேகரிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட விளாக்கொத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளது.