Abstract:
கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியினால் வறிய மக்களுக்கு பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றது. இருந்தபோதும் பயனாளிகனால் உரிய நேரத்தில் சேவைகளை பெற்றுக்கொள்ள முடிவதில்லை. இதேவேளை வங்கி உத்தியோகத்தர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையில் சுமூகமான தொடர்பு காணப்படவில்லை, வழங்கப்படும் சேவைகள் தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு போதிய அறிவு இன்மை மற்றும் வங்கி உத்தியோகத்தர்கள் வங்கி நடவடிக்கைகள் தொடர்பாக விடும் அதிகமான கவலையீனப் பிழைகள் என்பன பிரச்சனைகளாக இனங்காணப்பட்டமையினால் வங்கியானது போதிய இட வசதியை கொண்டிராமையினாலும் கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியின் சேவைத்தரத்திற்கும் வாடிக்கையாளரின் திருப்தி நிலைக்குமிடையில் எவ்வாறான தொடர்பு காணப்படுகின்றது எனும் தலைப்பிலே இவ்ஆய்வு முன்னெடுக்கப்பட்டது. இவ் ஆய்வின் நோக்கங்களாக வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியின் சேவைத்தரத்தினை அளவீடு செய்தல், இவ் வங்கியின் வாடிக்கையாளர் திருப்தியினை அளவீடு செய்தல் மற்றும் இவ் வங்கியின் வாடிக்கையாளர் திருப்தியில் ஏற்படுத்தும் தாக்கத்தினை அளவீடு செய்தல் என்பன கொள்ளப்பட்டு முன்வைக்கப்பட்டது. இதற்காக கிரான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 17 கிராமசேவகர் பிரிவினிலே மொத்தமாக 3889 சமூர்த்தி பயனாளிகள் காணப்படகின்றனர் இவர்களில் ஒவ்வொரு பிரிவிலும் இருந்து சராசரியாக 5% LOIT பயனாளிகளை தொரிவுசெய்யும் நோக்குடன் இவ்ஆயவின் மாதிரிகளாக 197 சமூர்த்தி பயனாளிகள் எழுமாறாக உட்படுத்தப்பட்டனர்.
இவ்வாறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களிடம் பொருத்தமான கூற்றுக்களைக்கொண்டு தயாரிக்கப்பட்ட வினாக்கொத்து மூலம் தரவுகள் திரட்டப்பட்டு, திரட்டப்பட்ட தரவுகள் 5 licket முறையில் SPSS மென்பொருளின் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டது. இவ்வாறு பகுப்பாய்வு மேற்கொண்டதற்கு அமைவாக இவ் ஆயிலில் 48 ஆண்களும் 149 பெண்களும் உட்படுத்தப்பட்டுள்ளனர். 54.8% மானேர் 21-40 வயதுக்கு உட்பட்டவர்களாக காணப்பட்டனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் அதிகமாக 43.1% மானோர் ரூபா 5000.00 ரூபா 10000.00 க்கு உட்பட்ட வருமானத்தை பெறுவோரே. வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியின் சேவைத்தரத்தினை அறிவதற்காக கட்புலனாகும் தன்மை, நம்பகத்தன்மை. அக்கறை, உத்தரவாதம் மற்றும் உள்ளக்கிளர்ச்சி ஆகிய குறிகாட்டிகளைக்கொண்டு பகுப்பாய்வு செய்த போது இதற்கான இடைப்பெறுமானம் முறையே 3.236, 3.369,3.387, 3.506, 2.889 ஆக காணப்பட்டது. வாழ்வின் எழுச்சி வங்கியின் சேவைத்தரம் 3.317 எனும் இடைப்பெறுமானத்தை காட்டியதனால் சேவைத்தரம் மத்திம நிலையில் உள்ளது. இதனால் சேவைத்தரத்தை உயர் மட்டத்திற்கு கொண்டுவருவதற்கான பரிந்துரைகளும் இங்கு முன்வைக்கப்பட்டுள்ளன